தென்னிந்திய உள்ளடக்கத்துக்கு ₹4,000 கோடி முதலீடு: தமிழக அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்
தென்னிந்திய உள்ளடக்கங்களை மேம்படுத்த ₹4,000 கோடி முதலீடு செய்ய ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம்; 25 புதிய தொடர்கள் அறிவிப்பு.
தென்னிந்திய உள்ளடக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசுடன் Letter of Intent (ஒப்பந்தக் கடிதம்) ஒன்றையும் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த அறிவிப்பு டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை நடைபெற்ற ‘South Unbound’ நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதில், தென்னிந்திய மொழிகளில் உருவாகும் மூல (original) தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், பிராந்திய கதைசொல்லலுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஆதரிப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாக குறிப்பிடப்பட்டன. இக்கதைகள் தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களையும் எட்டும் வகையில் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய படைப்பாளர்களுக்கான ஆதரவு
இந்த விரிவாக்கத் திட்டத்தின் கீழ், எழுத்தாளர் பயிற்சி முகாம்கள், வழிகாட்டல் (mentorship) திட்டங்கள், திறன் மேம்பாட்டு பணிமனைகள் ஆகியவற்றை ஜியோ ஹாட்ஸ்டார் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் புதிய திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர்கள் உருவாக்கப்படுவார்கள்.
மேலும், 25 புதிய தென்னிந்திய தலைப்புகளை நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் சேதுபதியின் காட்டான், காஜல் அகர்வாலின் விசாகா, நிவின் பாலியின் பார்மா உள்ளிட்ட முக்கிய படைப்புகள் இடம்பெறுகின்றன.
பிக்பாஸ் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) தவிர, Good Wife Season 2, Moodu Lantharlu, Kerala Crime Files Season 3, LBW, Vikram on Duty, Cousins and Kalyanams, Lucky: The Superstar, Secret Stories, Resort, Varam, Anali, Heartbeat Season 3, Batchmates, 1000 Babies Season 2, Lingam, Love Always, Save the Tiger Season 3, Comedy Cooksபோன்ற தொடர்களும் வெளியாக உள்ளன.
பிரபலங்களின் பாராட்டு
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்-எம்.பி. கமல்ஹாசன், தகவல் துறை அமைச்சர் மு.பி. சமிநாதன், விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த முயற்சி பொழுதுபோக்கு துறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறினார். “இன்று பிராந்தியம் தான் புதிய தேசியம்; உள்ளூர் கதைகள் உலகளாவிய கலாச்சார நிகழ்வுகளாக மாறுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிர்வாகத்தின் பார்வை
கிருஷ்ணன் குட்டி, தென்னிந்திய பொழுதுபோக்கு பிரிவு தலைவர், தென்னிந்தியா எப்போதும் படைப்பாற்றலின் மையமாக இருந்து வருவதாக கூறினார். கடந்த 10 மாதங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டாருடன் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுஷாந்த் ஸ்ரீராம், SVOD Business தலைவர் மற்றும் CMO, இந்திய பொழுதுபோக்கின் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் ஜியோ ஹாட்ஸ்டார் தொடங்கப்பட்டதாக கூறினார். தென்னிந்திய கதைசொல்லல் பாரம்பரியம் இந்திய சினிமாவுக்கு பெரும் ஊக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0