பாதுகாப்பு காரணமாக சின்னசாமி ஸ்டேடியத்திலிருந்து BCCI சிறப்பு மையத்திற்கு மாற்றப்பட்ட விஜய் ஹசாரே போட்டிகள்
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த விஜய் ஹசாரே போட்டிகள் BCCI CoE-க்கு மாற்றப்பட்டுள்ளன.
கர்நாடக அரசு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த அனைத்து விஜய் ஹசாரே டிராபி போட்டிகளும் தற்போது BCCI Centre of Excellence (CoE)-க்கு மாற்றப்பட்டுள்ளன.
DDCA அதிகாரி ஒருவர் IANS-க்கு அளித்த தகவலின் படி, இந்த முடிவு மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் முன்கூட்டியே எடுக்கப்பட்டது. தொடக்கப் போட்டியில் விளையாடவிருந்த இரு அணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கு முன் நடைபெறும் பயிற்சியும் CoE-யில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி போட்டி ஆந்திராவுக்கு எதிராக CoE-யில் நடைபெறும்.
பெங்களூருவில் நடைபெறும் அனைத்து விஜய் ஹசாரே போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும். Aerospace Park பகுதியில் அமைந்துள்ள CoE சுற்றுவட்டாரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை உறுதி அளித்துள்ளது.
பாதுகாப்பு ஆய்வுக்குப் பின் அனுமதி மறுப்பு
டெல்லி–ஆந்திரப் பிரதேச அணிகள் மோதும் விஜய் ஹசாரே போட்டிக்கு சின்னசாமி ஸ்டேடியத்தில் அனுமதி வழங்க முடியாது என கர்நாடக காவல்துறை மறுத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு தொடர்பான கடுமையான குறைபாடுகள் இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளன.
பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், கிரேட்டர் பெங்களூரு ஆணையம், மற்றும் தீயணைப்பு துறைஅதிகாரிகள் இணைந்து நடத்திய ஆய்வில், ஸ்டேடியத்தின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர மேலாண்மை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
முன்னதாக, காவல்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்பு துறை, BESCOM, மற்றும் GBA அதிகாரிகள் அடங்கிய குழு ஸ்டேடியத்தை ஆய்வு செய்து அரசுக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.
இதற்கு முன், பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் 17 அம்ச பாதுகாப்பு வழிகாட்டுதலை வெளியிட்டிருந்தார். அந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால், போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்த முடியும் என KSCA நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0