ரியல் மணி கேமிங் தடை பிறகு Dream11 எவ்வாறு தன்னை மறுபடியும் உருவாக்குகிறது?

ரியல் மணி கேமிங் தடை பிறகு Dream11, சமூக விளையாட்டு அனுபவம் மற்றும் வாட்ச் பார்ட்டி மையமாகக் கொண்டு தன்னை மறுபடியும் உருவாக்குகிறது.

Jan 2, 2026 - 01:54
 0  0
ரியல் மணி கேமிங் தடை பிறகு Dream11 எவ்வாறு தன்னை மறுபடியும் உருவாக்குகிறது?

ஒருகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபேண்டசி ஸ்போர்ட்ஸ் தளமாக இருந்த Dream11, அரசு கொண்டு வந்த ரியல் மணி ஆன்லைன் கேமிங் தடை விதிமுறைகள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது. கட்டண போட்டிகள், நுழைவு கட்டணம் மற்றும் பண பரிசுகள் தடைசெய்யப்பட்டதால், Dream11-ன் வருமானத்தின் 90–95% வரை ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது.

இந்த தடை காரணமாக Dream11, PokerBaazi, Mobile Premier League உள்ளிட்ட பல கேமிங் செயலிகள் ரியல் மணி சேவைகளை நிறுத்தின. அரசு இந்த முடிவை, பயனாளர்களுக்கு ஏற்படும் நிதி மற்றும் மனநல ஆபத்துகளைகாரணமாகக் கூறி நியாயப்படுத்தியது. இதன் பின்னர், BCCI கூட Dream11 உடனான நீண்டகால கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டு வந்து, இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் இணைவதில்லை என அறிவித்தது. அதன் இடத்தில் Apollo Tyres இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சராக நியமிக்கப்பட்டது.

இந்த சவால்களுக்கு மத்தியில் Dream11 பின்வாங்கவில்லை. அதன் பெற்றோர் நிறுவனம் Dream Sports மூலம், இது தற்போது ஒரு பெரும் விளையாட்டு சூழல் (sports ecosystem) ஆக மாறி வருகிறது. இதில் FanCode (விளையாட்டு ஸ்ட்ரீமிங் தளம்), DreamSetGo (பிரீமியம் விளையாட்டு பயண அனுபவங்கள்) மற்றும் Dream Capital (ஸ்போர்ட்ஸ், ஃபிட்னஸ், கேமிங் ஸ்டார்ட்அப்புகளில் முதலீடு செய்யும் பிரிவு) ஆகியவை அடங்கும்.

Dream11-ன் மறுஉருவாக்கம்

பாரம்பரிய ஃபேண்டசி கேமிங் மாடலிலிருந்து விலகி, Dream11 தற்போது ரசிகர் ஈடுபாடு மற்றும் உள்ளடக்கம்மையமாகக் கொண்ட தளமாக மாறுகிறது. 2025 இறுதியில், இந்தியாவில் வளர்ந்து வரும் வாட்ச் பார்ட்டி கலாச்சாரத்தை கருத்தில் கொண்டு, புதிய வடிவமைப்புடன் செயலியை அறிமுகப்படுத்தியது.

இனி Dream11 செயலி, அணிகளைத் தேர்வு செய்வதோ அல்லது பணம் வெல்வதோ அல்ல. ரசிகர்கள் லைவ் வாட்ச் ரூம்களில் இணைந்து உரையாடலாம், உடனடி கருத்துகளை பகிரலாம், மற்றும் இலவச கருத்துக்கணிப்புகள், கணிப்புகள், டிரிவியா போன்றவற்றில் பங்கேற்கலாம்.

Dream11 இணை நிறுவனர் மற்றும் CEO ஹர்ஷ் ஜெயின் கூறுகையில், விதிமுறைகள் மாறினாலும் ரசிகர்களின் நடத்தை மாறவில்லை. இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமான ஆன்லைன் வீடியோ பார்வையாளர்கள் உள்ள நிலையில், விளையாட்டுகளை சமூக அனுபவமாகக் காணும் ஆர்வம் தொடர்கிறது என்றார்.

இனி Dream11-ன் வருமானம் பெரும்பாலும் விளம்பரங்கள், பிராண்ட் கூட்டாண்மைகள் மற்றும் பிரீமியம் ரசிகர் அம்சங்கள் மீது தங்கியிருக்கும். இருப்பினும், விளம்பர மாடல் நிலையானது அல்ல என்பதால், YouTube, Instagram, Xபோன்ற தளங்களுடன் Dream11 நேரடி போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த புதிய அடையாளத்தில் Dream11 மீண்டும் வெற்றிபெறுமா என்பதை காலமே தீர்மானிக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0