PMSBY விபத்து காப்பீட்டு திட்டம் 2025: பயன்கள், கட்டணம், தகுதி & விண்ணப்பம்
PMSBY விபத்து காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ₹20 செலுத்தினால் ₹2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். தகுதி, பயன்கள் மற்றும் விண்ணப்ப முறை இங்கே.
திட்ட விவரங்கள் (Details)
PMSBY என்பது ஒரு விபத்து காப்பீட்டு திட்டமாகும். விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனமுற்றல்ஆகியவற்றிற்கு இந்த திட்டம் காப்பீடு வழங்குகிறது.
பிரீமியம் (Premium)
-
ஒருவருக்கு ஆண்டுக்கு ₹20 மட்டும்.
-
இந்த தொகை, உறுப்பினரின் வங்கி கணக்கு அல்லது தபால் நிலையக் கணக்கிலிருந்து ‘Auto Debit’ மூலம்ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பிடித்தம் செய்யப்படும்.
காப்பீட்டு காலம் (Coverage Duration)
-
இந்த காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
-
ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தினால் காப்பீடு தொடரும்.
காப்பீடு நிறுத்தப்படும் நிலைகள் (Termination Conditions)
பின்வரும் சூழ்நிலைகளில் காப்பீடு நிறுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும்:
-
உறுப்பினர் 70 வயதை அடைந்தால்
-
வங்கி கணக்கு மூடப்பட்டால் அல்லது
-
கணக்கில் போதுமான தொகை இல்லாதால்
-
ஒரே நபர் பல வங்கி கணக்குகளில் PMSBY எடுத்திருந்தாலும், தவறுதலாக பல பிரீமியம் பிடித்தம் செய்தால், காப்பீடு ₹2 லட்சத்திற்கு மட்டும் வழங்கப்படும்.
பயன்கள் (Benefits)
-
விபத்தில் மரணம் – பெயரிடப்பட்ட நபருக்கு ₹2 லட்சம்
-
இரு கண்களின் பார்வை முழுமையாக இழந்தால் / இரு கைகள் அல்லது கால்கள் செயலிழந்தால் – ₹2 லட்சம்
-
ஒரு கண் பார்வை இழப்பு அல்லது ஒரு கை /கால் செயலிழந்தால் – ₹1 லட்சம்
தகுதி (Eligibility)
-
18 வயது முதல் 70 வயது வரை உள்ள
-
வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்
-
Auto Debit ஒப்புதல் அளித்தவர்கள்
-
பங்கேற்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
விண்ணப்ப முறை – ஆஃப்லைன் (Offline Application Process)
படி 1:
உங்கள் வங்கி கிளையிலோ அல்லது கீழ்காணும் இணையதளத்தில் இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்:
👉 https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx
படி 2:
படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் உங்கள் வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3:
விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டவுடன், காப்பீட்டு சான்றிதழ் மற்றும் அங்கீகார சீட்டு வழங்கப்படும்.
தொடர்பு விவரங்கள் (Contact Details)
-
மாநில வாரியான இலவச தொலைபேசி எண்கள்:
https://jansuraksha.gov.in/files/STATEWISETOLLFREE.pdf -
தேசிய இலவச தொலைபேசி எண்கள்:
📞 1800-180-1111
📞 1800-110-001
ஆன்லைன் விண்ணப்பம் (Online Application Process)
-
உங்கள் வங்கியின் Net Banking மூலம் ஆன்லைனிலும் PMSBY காப்பீட்டில் சேரலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0